
அட்லீயை தொடர்ந்து மற்றொரு தென்னிந்திய இயக்குநருடன் இணையும் ஷாருக்கான்
அட்லீ மற்றும் ஷாருக் கான் கூட்டணியில் உருவான ஜவான் படம் 1000 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது. தென்னிந்திய படங்கள் குறிப்பாக தெலுங்கு படங்கள் கடந்த சில வருடங்களாக ஹிந்தியிலும் ஹிட் ஆகி நல்ல வசூலை பெற்று வருகின்றன.
அதனால் தென்னிந்திய இயக்குநர்களுக்கு ஹிந்தியில் வாய்ப்புகளும் அதிகம் வர தொடங்கி இருக்கிறது. அனிமல் படம் தொடங்கி ஜவான் படம் வரை பல படங்கள் தென்னிந்திய இயக்குனர்கள் இயக்கி பாலிவுட்டில் பெரிய ஹிட் ஆகி இருக்கிறது.
இந்நிலையில் புஷ்பா 2 படம் மூலமாக பெரிய ஹிட் கொடுத்து இருக்கும் இயக்குநர் சுகுமார் உடன் ஷாருக் கான் அடுத்து கூட்டணி சேர இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
அதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், படம் உறுதியானால் ஷாருக் அதில் அதிக வில்லத்தனம் இருக்கும் anti-heroவாக நடிக்க போகிறாராம்.
CATEGORIES சினிமா
