
பிரித்தானியாவில் நிலவும் கடுமையான வானிலை
இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து பிரித்தானியாவில் கடுமையான வானிலை நிலவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரலாறு காணாத மழைப்பொழிவு பதிவாகியுள்ளதாகவும் வானிலை ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
தெற்கு வேல்ஸ் மற்றும் இங்கிலாந்தின் பெரும்பகுதியில் மஞ்சள் வானிலை எச்சரிக்கையுடன், கனமழை நீடித்துள்ளமையால், திங்கட்கிழமை சுமார் 100 இடங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடுமையான வானிலை காணரமாக இதுவரை குறைந்தது 300 கட்டிடங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக சுற்றுச்சூழல் நிறுவனம் மதிப்பிட்டுள்ளது.
தென்மேற்கு இங்கிலாந்தின் கார்ன்வால் மற்றும் வடக்கு அயர்லாந்தின் கவுண்டி டவுனில் ஜனவரி மாதத்தில் அதிகபட்ச மழைப்பொழிவு பதிவாகியுள்ளதாக வானிலை அலுவலகம் தெரிவித்துள்ளது.
டிசம்பர், ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் எதிர்பார்க்கப்படும் சராசரி மழைப்பொழிவில் 89 வீதம் ஏற்கனவே பிரித்தானியாவில் பதிவாகியுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
