இந்தியாவுடன் ஏழு புதிய ஒப்பந்தங்கள் கைச்சாத்து – இருநாடுகளும் இடையில் மின் கட்டமைப்புகள் இணைப்பு

இந்தியாவுடன் ஏழு புதிய ஒப்பந்தங்கள் கைச்சாத்து – இருநாடுகளும் இடையில் மின் கட்டமைப்புகள் இணைப்பு

பாதுகாப்பு, மின் கட்டமைப்புகள் இணைப்பு, திருகோணமலையை எரிசக்தி மையமாக மேம்படுத்துதல், டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் சுகாதாரத் துறையில் ஒத்துழைப்பு போன்ற துறைகளை உள்ளடக்கிய ஏழு புரிந்துணர்வு ஒப்பந்தங்களை இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

திருகோணமலையில் உள்ள எரிசக்தி மையத்துடன் தொடர்புடைய புரிந்துணர்வு ஒப்பந்தம் ஐக்கிய அரபு எமிரேட்ஸை உள்ளடக்கிய முத்தரப்பு ஒப்பந்தமாகும்.

இலங்கைக்கு மூன்றுநாள் அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடன் பேச்சுகளில் ஈடுபட்டார்.

இதன் பின்னரே இந்த 7 ஒப்பந்தகளும் கைச்சாத்திடப்பட்டுள்ளன.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )