செக் குடியரசின் தூதுவரை சந்தித்த செந்தில் தொண்டமான்

இந்தியா, பங்களாதேஷ், பூட்டான், மாலைத்தீவு, நேபாளம் மற்றும் இலங்கைக்கான செக் குடியரசின் தூதுவர் H.E. எலிஸ்கா ஜிகோவா மற்றும் துணைத் தூதுவர் டாக்டர் லோலிதா ஆகியோரை இ.தொ.காவின் தலைவர் செந்தில் தொண்டமான் கொழும்பில் சந்தித்து கலந்துரையாடல் மேற்கொண்டார்.
இதன்போது மலையக மக்களின் மேம்பாடுகள் மற்றும் அபிவிருத்திகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.
எதிர்கால ஒத்துழைப்புகள் மற்றும் உறவுகளை விரிவாக்குவது குறித்தும் குறித்த குழுவினருடன் செந்தில் தொண்டமான் கலந்துரையாடினார்.