இந்திய துணை ஜனாதிபதியின் பதவி பிரமாண நிகழ்வில் கலந்துகொண்ட செந்தில் தொண்டமான்

இந்திய துணை ஜனாதிபதியின் பதவி பிரமாணத்தில் இ.தொ.காவின் தலைவர் செந்தில் தொண்டமான் கலந்துகொண்டுள்ளார்.
சி.பி.ராதாகிருஷ்ணன், புதுடில்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையான ராஷ்டிரபதி பவனில் ஜனாதிபதி திரவுபதி முர்மு முன்னிலையில் இன்று பதவியேற்றார்.
இந்த நிகழ்வில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி உட்பட பல முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.
நேபாளத்தில் நடைபெற்ற சர்வதேச பொது சேவை குழு (PSI) கூட்டத்தில் கலந்துகொள்ள சென்றிருந்த இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமானுக்கு சி.பி.ராதாகிருஷ்ணனின் பதவி பிரமாண நிகழ்வில் கலந்துகொள்ள விடுக்கப்பட்ட அழைப்பின் பிரகாரம் அவர் இன்று குறித்த நிகழ்வில் கலந்துகொண்டுள்ளார்.