செனேஷ் திஸாநாயக்க பண்டார மூன்று மாதத்திற்கே பொறுப்பேற்றார்

செனேஷ் திஸாநாயக்க பண்டார மூன்று மாதத்திற்கே பொறுப்பேற்றார்

ரூபவாஹினி தொலைக்காட்சியின் தலைவர் பதவியில் இருந்து செனேஷ் திஸாநாயக்க பண்டார இராஜினாமா செய்துள்ளதை சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ பிபிசி சிங்கள செய்தி சேவையிடம் உறுதிப்படுத்தியுள்ளார்.

செனேஷ் பொறுப்பேற்கும் போது தன்னால் மூன்று மாதம் மாத்திரமே இதனை செய்ய முடியும் எனக் கூறியிருந்ததாகவும், இன்றுடன் அது நிறைவடைவதாகவும் நளிந்த ஜயதிஸ்ஸ சுட்டிக்காட்டினார்.

செனேஷ் திஸாநாயக்க பண்டாரவின் இராஜினாமாவை தொடர்ந்து ரூபவாஹினி தொலைக்காட்சியின் தலைவராக கிஹான் த சில்வா நியமிக்கப்படவுள்ள நிலையில், நாளை (26) தனது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Share This