செம்மணி மனிதப் புதைகுழி – நீதிமன்றச் செயல்பாடுகளுக்கு முழுமையாக அரசாங்கம் ஆதரவு

செம்மணி மனிதப் புதைகுழி – நீதிமன்றச் செயல்பாடுகளுக்கு முழுமையாக அரசாங்கம் ஆதரவு

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தில் நீதிமன்றச் செயல்பாடுகளுக்கு அரசாங்கம் முழுமையாக ஆதரவு வழங்குவதாக அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் விசேட ஊடகவியலாளர் சந்திப்பு இன்று செவ்வாய்க்கிழமை அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

செம்மணி மனிதப் புதைகுழியில் மூன்று கட்டங்களாக மேற்கொள்ளப்பட்டுள்ள அகழ்வு பணிகளில் இதுவரை 44 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 61 மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த அகழ்வுகள் தொடர்ந்து கொண்டுசெல்ல அரசாங்கம் முழுமையான ஆதரவை வழங்கும். குறிப்பாக நீதிமன்றத்தின் செயல்பாடுகளுக்கு முழுமையான ஒத்துழைப்புகளை வழங்க தயாராக உள்ளோம் என்றும் அவர் கூறினார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )