நிதி விடுவிக்காத காரணத்தினால் செம்மணி மனிதப் புதைகுழி வழக்கு ஒத்திவைப்பு

நிதி விடுவிக்காத காரணத்தினால் செம்மணி மனிதப் புதைகுழி வழக்கு ஒத்திவைப்பு

யாழ்ப்பாணம் – அரியாலை, சித்துப்பாத்தி பகுதியில் உள்ள செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு, அடுத்த கட்ட அகழ்வுப் பணிக்கான நிதி ஒதுக்கீடு கிடைக்கப்பெறாத காரணத்தினால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் நீதவான் எஸ். லெனின்குமார் முன்னிலையில் இன்று (1) இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, அடுத்த கட்ட அகழ்வுப் பணிகளை மேற்கொள்வதற்கான நிதி தொடர்பான அறிவிப்புகள் எதுவும் கிடைக்கப்பெறாமையினால், குறித்த வழக்கை எதிர்வரும் 13ஆம் திகதிக்கு நீதவான் தவணையிட்டுள்ளார்.

இந்நிலையில் நிதி கிடைத்தவுடன் அகழ்வுப் பணிகளைத் தொடர்வது குறித்து தீர்மானிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

CATEGORIES
TAGS
Share This