விஜயலட்சுமி பாலியல் தொழிலாளி…. கனிமொழி அதையேன் கேட்கவில்லை – சீமான் ஆவேசம்

விஜயலட்சுமி பாலியல் தொழிலாளி…. கனிமொழி அதையேன் கேட்கவில்லை – சீமான் ஆவேசம்

திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பாலியல் வழக்குகள் குறித்து பேசாதது ஏன் என தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் வைத்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அண்மையில் ஊடகங்களிடம் பேசிய கனிமொழி, “சீமானின் பேச்சைக் கேட்டுக் கொண்டு எப்படிதான் அந்த கட்சியில் பெண்கள் இருக்கிறார்களோ?” என பேசியிருந்தார்.

நடிகை விஜயலட்சுமி செய்துள்ள முறைப்பாட்டின் அடிப்படையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடந்து வரும் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் இன்று பேசிய சீமான், “தமிழ்நாட்டில் தினம்தோறும் நடக்கும் பாலியல் அத்துமீறல் சம்பவங்கள் குறித்து கனிமொழி கருத்து கூறினாரா?

அண்ணா பல்கலைக்கழக பாலியல் சம்பவம் தொடங்கி பாடசாலை மாணவிகள் வன்கொடுமை சம்பவங்கள் வரை கனிமொழி இதுவரை கருத்துகளை தெரிவிக்காதது ஏன்?

இவ்வாறான நிலையில், என்னை பாலியல் குற்றவாளி என சொல்ல நீங்கள் யார்? வழக்கு விசாரணையில் இருக்கும்போதே என்னை எப்படி குற்றவாளி என கூறமுடியும்?

என்னை அசிங்கப்படுத்த வேண்டும் என்றே அவதூறு பரப்பி வருகிறார்கள். என் மீது முறைப்பாடு செய்துள்ள நடிகை விஜயலட்சுமி ஒரு பாலியல் தொழிலாளி. அதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது” என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share This