சீமான், விஜய்க்கு வலைவீசும் எடப்பாடி – சிக்குவார்களா?

தமிழ்நாட்டில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அடுத்தடுத்து பல கட்சிகளை கூட்டணிக்கு அழைத்து வருகிறார். பாஜக உடன் வலுவான கூட்டணி அமைத்தும் கூட அவர் அடுத்தடுத்து முக்கியமான கட்சிகளை கூட்டணிக்கு அழைத்து வருகிறார். அவரின் இந்த செயல் பல கேள்விகளை எழுப்பி உள்ளது.
சிதம்பரம் தொகுதியில் எடப்பாடி பழனிசாமி மக்களை சந்தித்தார். அப்போது எடப்பாடி பழனிசாமி பேசுகையில், விழுப்புரத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடுக்கு அனுமதி அளிக்கப்படுவதில்லை. திருச்சியில் விசிக மாநாட்டிற்கு அனுமதி கொடுக்க மறுக்கிறார்கள். விசிகவின் கொடிக்கம்பம் நடுவதைத் தடுக்கிறார்கள். இவ்வளவு அசிங்கப்பட்டுமா அந்த கூட்டணியில் இருக்க வேண்டும்?
இந்த அவமானப்பட்டுமா திமுக உடனான கூட்டணியில் தொடர வேண்டும்? சிந்தித்து பாருங்கள். அதிமுகவைப் பொறுத்தவரை எங்கள் கூட்டணியில் சேரும் கட்சிகளுக்கு ரத்தன கம்பளம் விரித்து வரவேற்போம். கூட்டணி என்பது சூழ்நிலைக்கு தக்கவாறு அமைப்பது என்று தெரிவித்துள்ளார். ஆனால் அதிமுக கூட்டணிக்கு வருமாறு எடப்பாடி பழனிசாமி விடுத்த அழைப்பை விசிக, சி.பி.எம். கட்சிகள் நிராகரித்தன.
தி.மு.க. ஆட்சியை ஒழிக்க வேண்டும் என்ற ஒத்த எண்ணம் கொண்ட கட்சிகள் அ.தி.மு.க. கூட்டணியில் இணைய வேண்டும்.
விஜய்யும் தி.மு.க. ஆட்சிக்கு எதிராகத்தான் போராடுகிறார். எனவே எல்லா கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என்பது அவருடைய கட்சிக்கும் பொருந்தும்.
எங்களது பொதுவான கருத்து என்னவென்றால், இந்த கட்சி அந்தக் கட்சி என்றில்லை, தி.மு.க. ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப நினைக்கும் யாராக இருந்தாலும் எங்கள் கூட்டணிக்கு வரலாம். தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ளன. உரிய நேரத்தில் கூட்டணி குறித்த தெளிவான பார்வை கிடைக்கும்.
எடப்பாடி இப்படி அழைப்பதற்கு பின் பல காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. எடப்பாடிக்கு போதிய பலம் இப்போது இல்லை என்று ஒரு வாதம் வைக்கப்படுகிறது. அதிமுக கூட்டணி வெற்றிக்கூட்டணி இல்லை.
அதிலும் இப்போது அந்த கூட்டணியில் தேமுதிக இல்லை. பாமக இல்லை. பாமக விஜய் பக்கம் போனாலும் வியப்பு இல்லை. இப்படி இருக்க பழைய வாக்கு வங்கியை தக்க வைப்பதே வியப்பான விடயமதான் . அதுவே கடினமான விடயம்தான். இதன் காரணமாகவே தமிழ்நாட்டில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அடுத்தடுத்து பல கட்சிகளை கூட்டணிக்கு அழைத்து வருகிறார். பாஜக உடன் வலுவான கூட்டணி அமைத்தும் கூட அவர் அடுத்தடுத்து முக்கியமான கட்சிகளை கூட்டணிக்கு அழைத்து வருகிறார்.
ஆனால் இதற்கு விசிக திருமாவளவன் அளித்த பதிலில், அதிமுக – பாஜகவின் பழைய கூட்டணியில் இருந்த கட்சிகளே மீண்டும் அவர்களுடன் சேரவிலையே. பாமக மீண்டும் கூட்டணியில் இணையவில்லை. தேமுதிக மீண்டும் கூட்டணியில் இணையவில்லை. இதனால் வேறு வழியில்லாமல் புதிய புதிய கட்சிகளை கூட்டணியில் இணைக்க வேண்டிய கட்டாயம் பாஜகவிற்கு ஏற்பட்டு உள்ளது. அதிமுக பாஜக கூட்டணி அமைந்த பின் ஆட்சியை கைப்பற்றுவோம் என்றெல்லாம் சொன்னீர்களே. இப்போது என்ன ஆகிவிட்டது? ஏன் கூட்டணியில் வேறு கட்சிகள் இணைய முடியாமல் போய்விட்டது? ஏன் உங்கள் கூட்டணியில் இருந்த பழைய கட்சிகளே உங்களுடன் சேர மறுத்து வருகிறார்கள். திமுகவின் கூட்டணியில் உள்ள கட்சிகளை இப்போது அழைக்கிறீர்கள், என்று பலரும் எடப்பாடி அழைப்பை நிராகரித்து உள்ளனர்.
நாம் தமிழர் கட்சியும் எடப்பாடி பழனிசாமியின் அழைப்பை தொடர்ந்து நிராகரித்து வருகிறது.
அதிமுக, திமுக இரண்டும் ஊழல் கட்சிகள். இரண்டும் ஒரே குட்டையில் ஊரிய மட்டைகள் என சீமான் விமர்சித்து வருவதுடன், 234 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி இம்முறையும் தனித்து களமிறங்குவதில் உறுதியாக இருப்பதாக அவர் கூறிவருகிறார்.