விண்வெளியில் இருந்து இந்தியாவைப் பார்ப்பது தனி அழகு – சுனிதா வில்லியம்ஸ்

விண்வெளியில் இருந்து இந்தியாவைப் பார்ப்பது தனி அழகு – சுனிதா வில்லியம்ஸ்

விண்வெளியில் இருந்து இந்தியாவைப் பார்ப்பது தூரத்தில் உள்ள ஒரு வீட்டைப் பார்ப்பது போன்றது என்று விண்வெளியில் இருந்து பூமிக்கு திரும்பியுள்ள சுனிதா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.

விண்வெளியில் இருந்து பார்க்கும் போது இமயமலையும், மும்பையும் மிகவும் அழகாக இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

286 நாட்களுக்குப் பிறகு சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து பூமிக்கு திரும்பிய சுனிதா மற்றும் புட்ச் வில்மோர், ஊடகங்களிடம் பேசும்போது, ​​விண்வெளியில் இருந்து இந்தியா எப்படி இருக்கும் என்ற கேள்விக்கு பதிலளித்தனர்.

‘இந்தியா மிகவும் அழகாக இருக்கிறது.’ “நாங்கள் இமயமலைக்கு மேல் செல்லும் ஒவ்வொரு முறையும் இந்தியாவின் அழகிய படங்களைப் பிடிக்க முடிந்தது என்று” இவ்வாறு சுனிதா வில்லியம்ஸ் கூறினார். மேலும், விரைவில் இந்தியாவுக்கு வருகை தருவதாகவும் அவர் தெரிவித்தார்.

“விண்வெளி நிலையத்திலிருந்து பார்த்த இந்தியாவின் நிலப்பரப்பின் மாறுபட்ட வண்ணங்கள் வியக்க வைக்கின்றன.” கிழக்கிலிருந்து மும்பை பக்கத்தை அடையும் போது, ​​கரையில் மீன்பிடி படகுகள் இருக்கும். அது நம்மை வரவேற்பது போல் உணர்கிறேன்.

இரவில், சிறிய நகரங்களை பெரிய நகரங்களுடன் இணைக்கும் அழகிய மின் விளக்குகளின் வலையமைப்பைக் காணலாம், இந்தியாவுக்குள் இறங்கும் இமயமலை மலைகளும் அற்புதமானவை என்று சுனிதா சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில், விரைவில் இந்தியாவுக்கு வரவுள்ளதாகவும் தனது அனுபவங்களை முடிந்தவரை பலருடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுவதாகவும் சுனிதா வில்லியம்ஸ் மேலும் தெரிவித்துள்ளார்.

 

Share This