மேன்முறையீட்டு நீதிமன்ற வளாக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

மேன்முறையீட்டு நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பை பலப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நீதிமன்ற வளாகத்திற்குள் நுழையும் அனைத்து தனிநபர்கள் மற்றும் சட்டத்தரணிகளையும் சோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைவர் தலைமையில் இன்று (20) சிறப்புக் கூட்டம் நடைபெற்ற நிலையில் அதில் குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.