தமிழக வெற்றிக்கழகத்தின் இரண்டாவது மாநாடு – திகதி அறிவிக்கப்பட்டது

தமிழக வெற்றிக்கழகத்தின் இரண்டாவது மாநாடு – திகதி அறிவிக்கப்பட்டது

பிரபல தென்னிந்திய நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகத்தின் இரண்டாவது மாநாடு எதிர்வரும் 21ஆம் திகதி மதுரையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கட்டியின் முதல் மாநாடு, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலை கிராமத்தில் கடந்த ஆண்டு நடந்தது.

இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் எதிர்வரும் 25ஆம் திகதி நடத்த ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதையொட்டி மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை எலியார்பத்தி சுங்கச்சாவடி பகுதி அருகே உள்ள பாரபத்தி பகுதியில் மாநாட்டிற்கான பூமி பூஜை நடந்தது.

தொடர்ந்து கட்சி நிர்வாகிகள், மாநாட்டிற்கு அனுமதி பெறுவதற்காக மதுரை மாவட்ட பொலிஸ் தலைமை அலுவலகத்தில் மனு அளித்தனர். மேலும், மாநாட்டிற்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தனர்.

எவ்வாறாயினும், எதிர்வரும் 27ஆம் திகதி விநாயகர் சதுர்த்தி வருவதால் மாநாடு நடைபெறும் திகதியை மாற்றியமைக்குமாறு பொலிஸ் தரப்பில் வலியுறுத்தப்பட்டிருந்தது.

இதற்கு புஸ்சி ஆனந்த் தரப்பில், கட்சி தலைமையிடம் கேட்டு முடிவு செய்கிறோம் என கூறியிருந்தனர். இதனால், தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு குறிப்பிட்ட அந்த திகதியில் நடைபெறுமா? அல்லது திகதி மாற்றப்படுமா? என்ற கேள்வி எழுந்தது.

இந்நிலையில், எதிர்வரும் 21ஆம் திகதி மாநாடு நடைபெறும் என தமிழக வெற்றிக்கழகம் அறிவித்துள்ளது.

நிர்ணயித்த திகதிக்கு முன்பாகவே மாநாடு நடக்க இருப்பதால், மாநாட்டு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. மேலும், கட்சி நிர்வாகிகள் சமூக வலைதளங்களில் மாநாட்டுக்கான திகதி அறிவிப்பை பகிர்ந்து வருகின்றனர்.

 

Share This