காணாமற்போன வாகனங்களை தேடும் நடவடிக்கைகள் ஆரம்பம்

காணாமற்போன வாகனங்களை தேடும் நடவடிக்கைகள் ஆரம்பம்

மாகாண சபைகளுக்கு சொந்தமான காணாமற்போன வாகனங்களை தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் பிரதியமைச்சர் ருவான் செனரத் தெரிவித்தார்.

இந்த வாகனங்கள் தொடர்பிலான விசாரணைகளுக்காக குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,

மாகாண சபைகளுக்கு சொந்தமான நிறுவனங்களின் செயற்றிட்டங்களுக்காக வழங்கப்பட்ட வாகனங்கள் சில காணாமற் போயுள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றதையடுத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அரசுக்கு சொந்தமான வாகனங்களை முறைகேடாக பயன்படுத்திய தனிநபர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்றார்.

 

Share This