புலமை பரிசில் பரீட்சை முடிவுகள் – தமிழ் மொழியில் நாடளாவிய ரீதியில் யாழ் மாணவி முதலிடம்

புலமை பரிசில் பரீட்சை முடிவுகள் – தமிழ் மொழியில் நாடளாவிய ரீதியில் யாழ் மாணவி முதலிடம்

2025 ஆம் ஆண்டு ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளின்படி, சிங்கள மொழி மூலம் அதிக மதிப்பெண் பெற்றவர் காலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் மாணவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, நாடாளாவிய ரீதியில் முதலிடம் பிடித்தவர் 198 புள்ளிகளை பெற்றுக்கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி இதனைத் தெரிவித்தார்.

இதே நேரத்தில், தமிழ் மொழியில் அதிக மதிப்பெண் பெற்றவர் யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்றும், அவர் 194 புள்ளிகளைப் பெற்றுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ். இந்து ஆரம்ப பாடசாலை மாணவன் ஆனந்தசோதி லக்சயன் அகில இலங்கை ரீதியில் தமிழ் மொழி மூலமாக முதலிடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

Share This