இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு குடியேற்றங்களை சவுதி அரேபியா முற்றாக நிராகரிகப்பு

இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு குடியேற்றங்களை சவுதி அரேபியா முற்றாக நிராகரிகப்பு

இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டுள்ள அனைத்து குடியேற்றங்களையும் விரிவாக்க நடவடிக்கைகளையும் சவுதி அரேபியா முற்றாக நிராகரித்துள்ளது.

அதேநேரம் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் மீது இஸ்ரேலிய இறையாண்மையைத் திணிப்பதையும், சட்டவிரோத காலனித்துவ குடியேற்றத்தின் மீது இஸ்ரேலிய இறையாண்மையை நியாயப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட இரண்டு சட்ட மூலங்களின் முதற்கட்ட வாசிப்பை இஸ்ரேலிய பாராளுமன்றம் நிறைவேற்றி இருப்பதற்கும் சவுதி அரேபியா கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் சவுதி அரேபிய வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில், சர்வதேச தீர்மானங்களின்படி, கிழக்கு ஜெருசலமை அதன் தலைநகராகக் கொண்டதும் 1967 எல்லைகளில் தங்கள் சுதந்திர அரசை நிறுவுவதற்குமான பலஸ்தீன மக்களின் உள்ளார்ந்த மற்றும் வரலாற்று உரிமையை சவுதி அரேபியா மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

சர்வதேச தீர்மானங்களை செயல்படுத்துவதற்கு, பலஸ்தீன பிரதேசங்கள் மற்றும் பலஸ்தீன மக்கள் மீதான அனைத்து இஸ்ரேலிய தாக்குதல்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும். அத்தோடு இரு நாட்டு தீர்வை செயல்படுத்துவதன் அடிப்படையில் அமைதி செயல்முறையை முன்னெடுப்பதற்கும், பிராந்தியத்தின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை அடைவதற்கும் சர்வதேச சமூகம் அதன் முழுப் பொறுப்பை ஏற்றுக்கொள்வதன் முக்கியத்துவத்தையும் சவுதி சுட்டிக்காட்டியுள்ளது

Share This