வியாழேந்திரனின் விளக்கமறியல் காலம் நீடிப்பு

லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையத்தால் (CIABOC) கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனின் விளக்கமறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, எதிர்வரும் எட்டாம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
லஞ்சம் பெறுவதற்கு ஆதரவு வழங்கிய குற்றச்சாட்டில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்தின் அண்மையில் கைது செய்யப்பட்டிருந்தார்.
கைது செய்யப்பட்ட பின்னர், புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
இந்நிலையில், குறித்த வழக்கு இன்று (01) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதன் பின்னர் அவரை எதிர்வரும் எட்டாம் திகதி வரை மீண்டும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் இன்னும் முடிவடையவில்லை என்று இலஞ்ச ஆணைக்குழு அதிகாரிகள் அளித்த தகவலை ஏற்றுக்கொண்ட கொழும்பு பிரதான நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.