
சமன் ஏக்கநாயக்கவுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்
முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அமெரிக்காவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்து லண்டனில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் நடைபெற்ற தனது மனைவியின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டமைக்காகப் பெருமளவிலான அரச நிதியைச் செலவிட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி செயலாளராகப் பதவி வகித்த சமன் ஏக்கநாயக்க, குறித்த தனிப்பட்ட பயணத்திற்கான நிதியை விடுவித்தபோது உரிய வெளிப்படைத்தன்மையுடன் செயற்படவில்லை என அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டியிருப்பதைக் கருத்திற்கொண்டு,
சந்தேகநபரைத் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
