இலங்கையின் முதலீடுகள் குறித்து கவலை வெளியிட்டுள்ள ஐக்கிய மக்கள் சக்தி

இலங்கையின் முதலீடுகள் குறித்து கவலை வெளியிட்டுள்ள ஐக்கிய மக்கள் சக்தி

இலங்கை பெறும் முதலீடுகளின் நிலை தொடர்பில் முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கவலை வெளியிட்டுள்ளது.

முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்கும் தக்க வைத்து கொள்வதற்கும் நாடு விவேகமான முடிவுகளை எடுக்க வேண்டும் எனவும் ஐக்கிய மக்கள் சக்தி சுட்டிக்காட்டியுள்ளது.

நேற்று (09) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க இந்தக் கருத்தைத் தெரிவித்தார்.

அரசாங்கத்தின் பொருத்தமற்ற நடத்தை மற்றும் திட்டங்கள் குறித்து ஆர்வம் இல்லாத காரணத்தால், இந்திய கூட்டு நிறுவனமான அதானி குழுமம் இலங்கையில் தனது முன்மொழியப்பட்ட திட்டங்களை கைவிட்டதாக அவர் தெரிவித்தார்.

அதானி குழுமம் திட்டத்திலிருந்து விலக முடிவு செய்வதற்கு முன்பு அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்க வேண்டும் என்றும், நாட்டிற்கு கிடைக்கும் முதலீடுகளைப் பாதுகாக்க இதுபோன்ற விழிப்புணர்வு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

“இந்தியாவின் அதானி குழுமத்துடனான ஒப்பந்தங்களைத் திரும்பப் பெறுவதன் மூலம், இலங்கை மற்ற முதலீட்டாளர்களுக்கான அணுகலைத் தடுத்துள்ளது” என்று அவர் கூறினார்.

அதானி குழுமத்திற்கு மேலதிகமாக, பல சர்வதேச முதலீட்டாளர்கள் அண்மைய காலங்களில் நாட்டை விட்டு வெளியேறிவிட்டதாக திஸ்ஸ அத்தநாயக்க குற்றம் சாட்டினார்.

Share This