ஐக்கிய மக்கள் சக்தி வரவு செலவு திட்டத்திற்கு எதிராக வாக்களிக்கும்

ஐக்கிய மக்கள் சக்தி வரவு செலவு திட்டத்திற்கு எதிராக வாக்களிக்கும்

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியானது இம்முறை வரவு செலவு திட்டத்திற்கு எதிராக வாக்களிக்கும் என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேஷன் தெரிவித்தார்.

இன்று (21) நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்விடயத்தை தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“நாங்கள் இந்த வரவு செலவு திட்டத்திற்கு எதிராகவே வாக்களிப்போம். இது என்ன வரவு செலவுத் திட்டம் என எனக்கு தெரியாது.

இந்த வரவு செலவுத் திட்டத்தில் மலையக தமிழ் மக்களுக்காக திட்டங்கள் இருப்பதாக எனக்கு தெரியவில்லை.

மலையக தமிழ் மக்களுக்கு நாங்கள் எதுவும் செய்யவில்லை என கூற முடியாது.

நாங்கள் ஆரம்பித்த விடயங்களை முன்னோக்கி கொண்டு செல்லுங்கள்.” எனத் தெரிவித்தார்.

Share This