உப்பின் விலை அதிகரிக்கும் சாத்தியம்
சந்தையில் உப்பின் விலை மேலும் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளதாக அம்பாந்தோட்டை உப்பளத்தின் தலைவர் நந்தக திலக தெரிவித்தார்.
இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் முதலாவது உப்புத் தொகுதியின் ஒரு பகுதி அம்பாந்தோட்டை உப்பளத்திற்கு கிடைக்கப் பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
தற்போது 400 கிராம் உப்புத் தூள் பக்கட் ஒன்று 120 ரூபாய் வரையிலும் துகள் உப்பு பக்கட் ஒன்று 180 ரூபாய் வரையில் அதிகரித்துள்ளது.