உப்பு விலை அதிகரிப்பு
உப்பு விலையை அதிகரிக்க ஹம்பாந்தோட்டை லங்கா உப்பு நிறுவனம் தீர்மானித்துள்ளது.
இறக்குமதி செய்யப்படும் உப்பின் விலை அதிகரித்ததன் காரணமாக லங்கா உப்பு நிறுவனம் விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளது.
அதன்படி, 400 கிராம் உப்பு பக்கட் ஒன்றின் விலை 20 ரூபாவால் அதிகரித்து 120 ரூபாவாகவும், ஒரு கிலோ கல் உப்பு பக்கட் ஒன்றின் விலை 60 ரூபாவால் அதிகரித்து 180 ரூபாவாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த விலை உயர்வு தற்காலிக தீர்மானம் என்று ஹம்பாந்தோட்டை லங்கா உப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
நாட்டில் வருடாந்த உப்பு தேவை 200,000 மெற்றிக் தொன் என்று கூறப்படுகிறது. இருப்பினும், கடந்த வருடத்தின் கடைசி காலாண்டில் ஏற்பட்ட சீரற்ற வானிலை காரணமாக உப்பு உற்பத்தி குறைவடைந்தது. இதன் காரணமாக அரசாங்கம் உப்பை இறக்குமதி செய்ய முடிவு செய்தது. அதன்படி, 12,000 மெற்றிக் தொன் உப்பு இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.