இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உப்பு – நாளைமறுதினம் இலங்கைக்கு வருகிறது
இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் 4,500 மெற்றிக் தொன் உப்பு நாளைமறுதினம் ஜனவரி 27 ஆம் திகதி இலங்கையைலய வந்தடையும் என இலங்கை வர்த்தகக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
ஜனவரி 31 ஆம் திகதிக்குள் மேலதிகமாக 12,500 மெற்றிக் தொன் உப்பு இறக்குமதி செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளதாக கூட்டுத்தாபனத்தின் தலைவர் ரவீந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இந்தியாவிலிருந்து உப்பை இறக்குமதி செய்ய இரண்டு இறக்குமதியாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அண்மையில் ஏற்பட்ட பருவமழை காரணமாக உள்ளூர் உப்பு உற்பத்தியாளர்கள் எதிர்கொண்ட சவால்களைத் தொடர்ந்து, உப்பை இறக்குமதி செய்ய அரசாங்கம் முடிவு செய்தது என்றும் ரவீந்திர பெர்னாண்டோ கூறியுள்ளார்.