கல்வித் துறையில் காணப்படும் சம்பள முரண்பாடு – அவசியமான தலையீடுகள் அரசாங்கம் மேற்கொள்ளும்

கல்வித் துறையில் காணப்படும் சம்பள முரண்பாடு – அவசியமான தலையீடுகள் அரசாங்கம் மேற்கொள்ளும்

கல்வித் துறையில் காணப்படும் சம்பள முரண்பாடு தொடர்பாக எதிர்காலத்தில் கட்டமைப்பு ரீதியான அரசாங்கமொன்றாக அவசியமான தலையீடுகள் மேற்கொள்ளப்படும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

கல்வி கட்டமைப்பில் பலவீனங்கள் மற்றும் குறைபாடுகள் காணப்பட்ட போதிலும், இலங்கையின் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் மேற்கொள்ளும் விசேட சேவை நாட்டிற்குப் பெருமையாகும் என்றும் அவர் கூறினார்.

‘குரு பிரதிபா பிரபா – 2025’ ஆசிரியர் அதிபர்களைப் பாராட்டும் விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

கல்வி கட்டமைப்பிற் காணப்படும் பலவீனங்கள் மற்றும் குறைபாடுகளை கருத்தில் கொள்ளாது, இந்த நாட்டு ஆசிரியர்களின் மற்றும் வழங்கும் விசேட சேவை முழு நாட்டுக்கும் பெருமை சேர்ப்பதாகவும், பெற்றோர்களின் அர்ப்பணிப்பு மற்றும் சமமான பொறுப்பை ஏற்று பிள்ளைகளை அறிவால் நிறைந்தவர்களாக, குணத்தால் முழுமையானவர்களாக, அறிவுள்ள மற்றும் சமூகத்திற்கு பெருமதியான பிரஜைகளை உருவாக்குகின்ற ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டிய உயர் கௌரவம் மற்றும் இதய பூர்வமான நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

எதிர்காலத்தில் கல்வி முறையின் கட்டமைப்பை வலுப்படுத்தவும், ஒத்திசைவான பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தவும், ஆசிரியர்களால் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் மனித வளத்தை மேம்படுத்தவும் அரசாங்கத்தினால் புதிய திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாகவும், பாடசாலையில் உட்கட்டமைப்பு வசதிகளை முன்னேற்றுதல் ன, பாடசாலை கட்டமைப்பை டிஜிட்டல் மயப்படுத்துதல், ஆசிரியர்களுக்கு மற்றும் அதிபர்களுக்கு அவசியமான தொழிற்பயிற்சி நிகழ்வுகளை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் எதிர்பார்ப்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.

Share This