போப் பிரான்சிஸின் மறைவுக்கு அனுதாபம் தெரிவித்த சஜித் பிரேமதாச

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (25) காலை வத்திக்கான் தூதரகத்திற்குச் சென்று மறைந்த போப் பிரான்சிஸ் அவர்களுக்கு தனது அனுதாபத்தைத் தெரிவித்தார்.
இலங்கையில் உள்ள வத்திக்கான் தூதரகத்திற்கு வருகை தந்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இலங்கையின் வத்திக்கான் அப்போஸ்தலிக்க தூதுவர் பேராயர் பிரயன் உடெய்க்வேவை சந்தித்து சிறிது நேரம் உரையாடியதைத் தொடர்ந்து தனது அனுதாபத்தைத் தெரிவித்தார்.
பின்னர், அங்கு வைக்கப்பட்டிருந்த இரங்கல் புத்தகத்தில் குறிப்பு எழுதி, பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் அவர்களின் மறைவு குறித்து உலகெங்கிலும் உள்ள அனைத்து கிறிஸ்தவர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார்.