அவுஸ்திரேலிய ஆளுநர் நாயகத்தை சந்தித்தார் சஜித்

அவுஸ்திரேலிய ஆளுநர் நாயகத்தை சந்தித்தார் சஜித்

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய ஆளுநர் நாயகம் சமந்தா ஜோய் மோஸ்டினுக்கும் (Samantha Joy Mostyn) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று நடைபெற்றுள்ளது.

கொழும்பிலுள்ள அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் நேற்றுமுன்தினம் (07) இந்த விசேட சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரின் அழைப்பின் பேரில், அங்கு இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட போதே எதிர்க்கட்சித் தலைவர் சந்தித்து கலந்துரையாடினார்.

இதன்போது, அவுஸ்திரேலியவுக்கும், இலங்கைக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டிருந்தது.

இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்கத் தேவையான ஆதரவைப் பெற்றுத் தருமாறும் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்தார்.

அத்துடன் நாட்டின் ஏற்றுமதி சார்ந்த பொருட்களுக்கு அவுஸ்திரேலியாவில் அதிக சந்தை வாய்ப்புகளைப் பெற்றுத் தருமாறும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இதன்போது கோரியதாக அவரது ஊடக பிரிவு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share This