சசி தரூரை சந்தித்த சஜித்

சசி தரூரை சந்தித்த சஜித்
இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, புது டில்லியில் நேற்று இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும் காங்கிரஸ் கட்சியின் சிரேஷ்ட தலைவருமான டாக்டர் சசி தரூரைச் சந்தித்தார்.
ஜனநாயக விழுமியங்களை வலுப்படுத்துதல், இரு நாட்டு மக்களிடையே உறவுகளை மேம்படுத்தல் மற்றும் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்தல் உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் குறித்து இங்கு இருதரப்பினரும் அவதானம் செலுத்தினர்.
இங்கு, இரு தரப்பினரிடையே இரு நாடுகளினதும் அபிவிருத்தி சார் பல விடயங்கள் குறித்தான கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.
Share This