ஜூலி சங்கை சந்தித்த சஜித்

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்கை சந்தித்து இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் வரிகள் குறித்து கலந்துரையாடியுள்ளார்.
“அமெரிக்காவுடன் வர்த்தக உறவுகளை ஆழப்படுத்துவது குறித்து ஆக்கபூர்வமான கலந்துரையாடலை நடத்தினேன் என சஜித் பிரேமதாச இந்த சந்திப்பு குறித்து கருத்து வெளியிட்டுள்ளார்.
வர்த்தக வாய்ப்பைத் திறக்கும், இலங்கைத் தொழில்களை ஆதரிக்கும் மற்றும் இரு நாட்டு மக்களுக்கும் உண்மையான நன்மைகளை வழங்கும் நியாயமான, எதிர்கால நோக்குடைய கூட்டாண்மையின் முக்கியத்துவத்தையும் இந்த சந்திப்பில் வலியுறுத்தியதாக சஜித் பிரேமதாச கூறியுள்ளார்.
இதேவேளை, அமெரிக்காவின் புதிய வரிக் கொள்கையில் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்தும் அதற்கான தீர்வுகள் குறித்தும் அவர் கலந்துரையாடியுள்ளார்.