இம்தியாஸின் இராஜினாமாவை சஜித் இன்னும் ஏற்கவில்லை – கட்சியின் பொதுச்செயலாளர்

இம்தியாஸின் இராஜினாமாவை சஜித் இன்னும் ஏற்கவில்லை – கட்சியின் பொதுச்செயலாளர்

இம்தியாஸ் பாகீர் மாகார் ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பதவியின் இராஜினாமா கடிதத்தை கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் சமர்பித்திருந்தாலும் அவர் அதனை ஏற்கவில்லை என அக்கட்சியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

அதன்படி, இம்தியாஸ் இன்னும் ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளராக பதவி வகிப்பதாகவும் அவர் கூறினார்.

நேற்று (19) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இம்தியாஸ் ஒரு மரியாதைக்குரிய அரசியல்வாதி என்றும், அவர் ஐக்கிய மக்கள் சக்தியில் தொடர்ந்து இருக்க வேண்டும் என்றும் பொதுச் செயலாளர் கூறினார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளராக பதவி வகித்திருந்த இம்தியாஸ் பாகீர் மாகார் 18ஆம் திகதி தவிசாளர் பதவியிலிருந்தும் செயற்குழு உறுப்பினர் பதவியிலிருந்தும் இராஜினாமா செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share This