கொட்டும் மழையிலும் சிறப்பாக இடம்பெற்ற சென்மேரிஸ் தேசிய கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டி

கொட்டும் மழையிலும் சிறப்பாக இடம்பெற்ற சென்மேரிஸ் தேசிய கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டி

ஹட்டன் கல்வி வலையத்திற்குட்பட்ட பொகவந்தலாவ சென்மேரிஸ் தேசிய கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டிகள் 23.04.2025 அன்று கல்லூரியின் அதிபர் ஏ.வேலுசாமி தலைமையில் இடம்பெற்றிருந்தது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக ஹட்டன் வலையகல்வி பணிப்பாளர் ஆர்.விஜேயந்திரன், உதவி கல்வி பணிப்பாளர் நாகராஜ், கோட்டக் கல்வி பணிப்பாளர் சிவகுமார் மற்றும் அயல்பாடசாலையின் அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது அதிதிகள் பேண்ட் வாத்தியத்தோடு பாடசாலை மைதானத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

இதன்போது மாணவர்களுக்கான100 மீற்றர் ஓட்டப்போட்டி 400 மீற்றர் ஓட்டப்போட்டி என்பன இடம் பெற்றதுடன், மாணவர்களின் அணிவகுப்பு, உடற்பயிற்சி கண்காட்சி விநோத உடை போட்டிகள் என்பன இடம்பெற்றிருந்தன.

இதில் முதலாம் இடத்தை சோலன் இல்லமும், இரண்டாம இடத்தை பாண்டியன் இல்லமும், மூன்றாம் இடத்தை சேரன் இல்லம் பெற்றுக்கொண்டதுடன், வெற்றிபெற்ற இல்லங்களுக்கு கேடயங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

 

 

 

 

 

 

 

 

Share This