வீடு திரும்பினார் சைஃப் அலிகான்
பிரபல ஹிந்தி நடிகர் சைஃப் அலிகான் கடந்த 16 ஆம் திகதி அவர் தங்கியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் வைத்து மர்ம நபர் ஒருவரால் கத்தியால் குத்தப்பட்டார்.
சுமார் ஆறு முறை கத்தியால் குத்து வாங்கிய அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அலிகானின் கைகள், கழுத்து, முதுகுத்தண்டு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டிருந்த நிலையில் மருத்துவர்கள் அவருக்கு அறுவை சிகிச்சை செய்தனர்.
சுமார் ஐந்து நாட்களாக மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்த அலிகான், இன்று பிற்பகல் பலத்த பாதுகாப்புடன் வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இந்த சம்பவத்துக்குப் பின்னர் அவரது வீட்டுக்கு வெளியேயும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.