ரஷ்ய பெண் ஒருவர் தென்னிலங்கையில் கைது

ரஷ்ய பெண் ஒருவர் தென்னிலங்கையில் கைது

சுற்றுலா விசாவில் இலங்கையில் தங்கியிருந்து வணிக நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 29 வயது ரஷ்யப் பெண் ஒருவர் உனவதுன சுற்றுலாப் பொலிஸ் பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

முதற்கட்ட விசாரணைகளின்படி, அந்தப் பெண் விசா விதிகளை மீறி, உனவதுன பகுதியில் ஒரு ஹோட்டல் மற்றும் உணவகத்தை இரவு விடுதியாக நடத்தி வந்துள்ளார்.

கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ரஷ்யப் பெண் மேலதிக விசாரணைகளுக்காக ஹபரதுவ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட வெளிநாட்டு பிரஜை நாளை (5) காலி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

Share This