ரஷ்ய, ஈரான் கடற்படை கஸ்பியன் கடலில் போர்ப்பயிற்சி

ரஷ்ய, ஈரான் கடற்படை கஸ்பியன் கடலில் போர்ப்பயிற்சி

ரஷ்யாவும் ஈரானும் கூட்டு கடற்பயிற்சியை கஸ்பியன் கடற்பரப்பில் முன்னெடுததுள்ளன. இப்பயிற்சியில் ஈரான் இஸ்லாமிய புரட்சி காவலர் படையும் பங்குபற்றியுள்ளது.

ரஷ்ய-ஈரானிய கடற்படைகளை உள்ளடக்கிய இப்பயிற்சியில் கடல்சார் மீட்பு மற்றும் நிவாரணப் பயிற்சிகள் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளளன.

‘கசரெக்ஸ் 2025’ என்ற குறியீட்டு பெயரில் இடம்பெறும் இப்பயிற்சியில் புரட்சி காவலர் படையின் தியாகி பசீர் போர்க்கப்பலும் பங்குபற்றியுள்ளதாக ஈரானிய பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர். ஈரானிய கடற்படையின் வடக்கு பிரிவால் ஏற்பாடு செய்து ‘கஸ்பியன் கடலைப் பாதுகாப்பதற்கு ஒன்றிணைவோம்’ என்ற தொனிப்பொருளில் நடத்தப்படும் இக்கூட்டுப்பயிற்சி இன்று நிறைவடைய உள்ளது, ஈரானிய கடற்படை, இஸ்லாமிய புரட்சி காவல்படையின் கடற்படை, ஈரானின் சட்ட அமுலாக்கக் கட்டளை பிரிவு, ரஷ்ய கூட்டமைப்பின் கடற்படை ஆகியவற்றின் வீரர்கள் இப்பயிற்சியில் பங்கேற்றுள்ளனர். அஜர்பைஜானும் கஜகஸ்தானும் இப்பயிற்சியில் பார்வையாளராகப் பங்குபற்றியுள்ளது.

Share This