பாதுகாப்பு செயலாளரை சந்தித்த ரஷ்ய தூதுவர்

இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் லெவன் எஸ்.தாகரியன் (Levan S. Dzhagaryan) நேற்று (மார்ச் 25) கோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு தலைமையக வளாகத்தில் உள்ள பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை (ஓய்வு) சந்தித்தார்.
ரஷ்ய தூதுவரை அன்புடன் வரவேற்ற பாதுகாப்பு செயலாளர் அவருடன் இருதரப்பு முக்கியத்துவம் மற்றும் பரஸ்பர விடயங்கள் குறித்து சுமுகமான கலந்துறையாடலில் ஈடுபட்டதாக பாதுகாப்பு அமைச்சின் ஊடகப்பிரிவு கூறியுள்ளது.