
அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியிலும் உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல்
உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 20 பேர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உக்ரைனின் தலைநகர் கீவ் மற்றும் வடகிழக்கு நகரமான கார்கிவ் ஆகியவற்றை இலக்கு வைத்து இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சுமார் நான்கு ஆண்டுகால போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்வைத்த திட்டம் குறித்த பேச்சுவார்த்தைகளின் இரண்டாவது நாளுக்காக ரஷ்யா, உக்ரைன் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த பேச்சுவார்த்தையாளர்கள் சனிக்கிழமை அபுதாபியில் சந்திக்கவுள்ள நிலையில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த முன்மொழிவு தொடர்பாக உக்ரைன் மற்றும் ரஷ்ய அதிகாரிகளுக்கு இடையேயான முதல் நேரடி தொடர்பு நேற்று ஆரம்பமானமை குறிப்பிடத்கத்கது.
