உக்ரைன்மீது மிகப்பெரிய வான்வழி தாக்குதலை நடத்திய ரஷ்யா

உக்ரைன்மீது மிகப்பெரிய வான்வழி தாக்குதலை நடத்திய ரஷ்யா

உக்ரைன் மீது ஒரே இரவில் 550 ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை வீசி ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளது.

போர் தொடங்கியதில் இருந்து உக்ரைன் மீது நடத்தப்பட்ட மிகப்பெரிய வான்வெளித் தாக்குதல் இதுவாகும். இத்தாக்குதலில் கீவ் நகரில் மட்டும் 23 பேர் படுகாடமடைந்தனர்.

ஒருபக்கம் உக்ரைன் மீதான போரை முடிவுக்கு கொண்டுவர ரஷ்ய ஜனாதிபதி புடினுடன், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். மறுபக்கம் உக்ரைன் மீதான தாக்குதலை மேலும் தீவிரமாக்கியுள்ளது ரஷ்யா.

உக்ரைன் மீது ரஷ்யா நேற்று முன்தினம் இரவு முழுவதும் 550 ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை வீசித் தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் விமானப்படை தெரிவித்துள்ளது.

இந்த மிகப்பெரிய வான்வெளி தாக்குதலில் பயன்படுத்தப்பட்டதில் பெரும்பாலானவை ஷாஹெட் ட்ரோன்கள் என்றும், இதில் சுமார் 11 ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டதாகவும் உக்ரைனின் விமானப்படை தெரிவித்துள்ளது.

முன்னதாக, கடந்த வாரம் ரஷ்யா உக்ரைன் மீது 537 ட்ரோன்கள் மற்றும் 60 ஏவுகணைகளை வீசித்தாக்கியது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மீண்டும் மிகப்பெரிய தாக்குதலை ரஷ்யா தொடுத்துள்ளதால், உக்ரைன் முழுவதும் பதற்றம் அதிகரித்துள்ளது.

 

Share This