
உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் – ஒருவர் பலி மேலும் 28 பேர் காயம்
உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 28 பேர் காயமடைந்துள்ளனர்.
ரஷ்யா சனிக்கிழமை அதிகாலை முதல் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் தாக்குதல்களை மேற்கொண்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
அமெரிக்கா மற்றும் உக்ரைன் தலைவர்கள் இடையே இடம்பெறவுள்ள முக்கிய சந்திப்புக்கு முன்னதாக இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது
இதேவேளை, சுமார் 500 ட்ரோன்கள் மற்றும் 40 ஏவுகணைகள் ஏவப்பட்டதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அங்கு சுமார் 10 மணி நேரம் வான்வழி எச்சரிக்கை அமலில் இருந்ததாக கூறப்படுகிறது.
CATEGORIES இலங்கை
