
இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் விநியோகிக்கத் தயார் – ரஷ்யா அறிவிப்பு
இந்தியாவுக்கு கூடுதலான கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுவை விநியோகிக்கத் தயாராக இருப்பதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
மத்திய கிழக்கில் ஈரான், இஸ்ரேல்-அமெரிக்கா இடையே கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக போா் நடைபெற்று வரும் நிலையில், உலகில் கச்சா எண்ணெய் கப்பல்கள் அதிகம் செல்லும் கடல்பகுதியான ஹோா்முஸ் நீரிணையை ஈரான் மூடிவிட்டது.
இதனால் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுவை பெறுவதில் இந்தியா பாரிய சிக்கல்களை எதிர்கொண்டுவந்தது.
இந்நிலையில், ரஷ்ய துணைப் பிரதமா் டெனில் மான்ட்ரூவ், இந்தியாவுக்கு கூடுதலான கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுவை விநியோகிக்கத் தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.
இந்திய தேவைகளைப் பூா்த்தி செய்ய ரஷ்யா தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளாா்.
TAGS ரஷ்யா
