ரோயல் பார்க் கொலை வழக்கு – ஒரு மில்லியன் இழப்பீட்டு தொகையை செலுத்தி முடித்த மைத்திரி

ரோயல் பார்க் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பிரதிவாதியை மன்னித்து விடுதலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய வழக்கில் ஒரு மில்லியன் இழப்பீட்டு தொகையை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நீதிமன்றத்துக்கு செலுத்தியுள்ளார்.
உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவிற்கு அமைய முன்னாள் ஜனாதிபதி இவ்வாறு தமது இழப்பீட்டு தொகையை செலுத்தியுள்ளார்.
ரோயல் பார்க் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஜூட் ஷ்ரமந்த ஜெயமஹாவுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்க முடிவு சட்டத்துக்கு முரணானது தொடுக்கப்பட்டிருந்த வழக்கில் முன்னாள் ஜனபதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகளாக எஸ்.துரைராஜா, யசந்த கோடகொட மற்றும் ஜனக் டி சில்வா ஆகியோர் அடங்கிய மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு முன் வழக்கு விசாரணை இடம்பெற்றிருந்தது.
வழக்கு விசாரணையின் போது மைத்திரிபால சிறிசேன நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
முன்னாள் ஜனாதிபதி சார்பாக ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணியும் எம்.பியுமான பைசர் முஸ்தபா, நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் இழப்பீட்டுத் தொகை முழுமையாக செலுத்தப்பட்டதாக நீதிமன்றத்திற்குத் தெரிவித்திருந்தார்
இந்த உறுதிப்படுத்தலைத் தொடர்ந்து, வழக்கு தொடர்பான மேலதிக நடவடிக்கைகளில் இருந்து மைத்திரிபால சிறிசேன விடுவிக்கப்பட்டார்.