RCB அணியின் புதிய தலைவராக ராஜத் படிதர் அறிவிப்பு
![RCB அணியின் புதிய தலைவராக ராஜத் படிதர் அறிவிப்பு RCB அணியின் புதிய தலைவராக ராஜத் படிதர் அறிவிப்பு](https://oruvan.com/wp-content/uploads/2025/02/rajat-patidar-rcb.jpg)
இந்த ஆண்டு (2025) இடம்பெறவுள்ள ஐபிஎல் தொடரில் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியை வழிநடத்தும் தலைவராக ராஜத் படிதர் அறிவிக்கப்பட்டுள்ளார்.
பெங்களூரில் இன்று நடந்த ஒரு நிகழ்வில் RCB அணியின் சிஓஓ ராஜேஷ் மேனன் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
2021ஆம் ஆண்டு RCB அணியில் ராஜத் படிதர் ஒப்பந்தம் செய்யப்பட்டார். வலது கை துடுப்பாட்ட வீரரான அவர் 27 ஐபிஎல் போட்டிகளில் அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார்.
34.74 என்ற சராசரியில் அவர் 799 ஓட்டங்களை குவித்துள்ளார்.
2025ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரை முன்னிட்டு கடந்த ஆண்டு இறுதியில் நடத்தப்பட்ட மெகா ஏலத்தில் கடந்த மூன்று பருவங்களாக அணித் தலைவராக செயப்பட்ட டு பிளெசிஸை RCB அணி விடுவித்திருந்தது.
மெகா ஏலத்தின் போது RCB அணி, கேஎல் ராகுல், ரிஷப் பந்த் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் போன்ற எந்த முக்கிய வீரர்களையும் தலைவர் பதிவிக்கு நியமிக்கும் வகையில் தெரிவுசெய்யவில்லை.
நடந்து முடிந்த மெகா ஏலத்தில் மொத்தம் 22 வீரர்களை RCB அணி ஒப்பந்தம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.