ஓய்வு பெற தயாராகும் ரொனால்டோ

ஓய்வு பெற தயாராகும் ரொனால்டோ

விரைவில் கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக போர்த்துகல் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தனது ஓய்வுக்கு பின்னரான வாழ்க்கையை சிறிது காலமாகத் திட்டமிட்டு வருவதாகவும், எனினும், தனது விளையாட்டு வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டுவருவது கடினம் என்பதையும் ஒப்புக்கொண்டுள்ளார்.

தற்போது அல் நாசர் அணிக்காக விளையாடி வரும் அவர் 952 கோல்களுடன் அதிக கோல்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.

இந்நிலையில், தனது ஓய்வு குறித்து பேசிய ரொனால்டோ,

“நான் தயாராக இருப்பேன் என்று நினைக்கிறேன். இது மிக மிக கடினமாக இருக்கும்,” என்று நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.

“நான் 25, 26, 27 வயதிலிருந்தே எனது எதிர்காலத்தைத் தயார்படுத்திக் கொண்டிருக்கிறேன். அந்த அழுத்தத்தைத் தாங்கும் திறன் எனக்கு இருக்கும் என்று நினைக்கிறேன்.

கால்பந்தில் கோல் அடிப்பதற்கு நீங்கள் கொண்டிருக்கும் திறனுக்கு இணையாக எதுவும் இருக்காது.”

“ஆனால் எல்லாவற்றிற்கும் ஒரு ஆரம்பம் உண்டு, எல்லாவற்றிற்கும் ஒரு முடிவும் உண்டு. எனக்காகவும், என் குடும்பத்திற்காகவும், என் குழந்தைகளை வளர்க்கவும் எனக்கு அதிக நேரம் ஒதுக்க முடியும். என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

Share This