ரொனால்டோ, கூகுள், ‘BELIEVE’ – கடைசி நாளில் சிராஜின் தாரக மந்திரம்

ரொனால்டோ, கூகுள், ‘BELIEVE’ – கடைசி நாளில் சிராஜின் தாரக மந்திரம்

தனது ஆதர்சம் விராட் கோலி போலவே சிராஜும் போர்ச்சுக்கல் கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் சிறந்த ரசிகர்.

எப்போதும் காலை 8 மணிக்கு எழுந்திருக்கும் சிராஜ், டெஸ்ட் போட்டியின் கடைசி நாளன்று நிலைகொள்ளா மன நிலையில் ஆறு மணிக்கெல்லாம் எழுந்து விட்டதாக பேட்டியில் கூறியுள்ளார்.

முதல் நாள் ஹாரி புரூக் அடித்த ஷாட்டை பவுண்டரியில் கேட்ச் பிடித்து விட்டு, தெரியாமல் பவுண்டரிக்குள் விழுந்து விட்ட சிராஜினால்தான் ஆட்டம் ஐந்தாம் நாளுக்கு வந்தது, இல்லையெனில் இவரே நான்காம் நாளிலேயே இங்கிலாந்தை பொட்டலம் கட்டியிருப்பார்.

அது சிக்ஸர் ஆனதும் அவருக்குள் பெரிய அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், அழுத்தம் தன்னை பற்றிக் கொள்ள விடாமல் அழுத்தத்தை எதிரணி மீது திருப்பி இரண்டு நீண்ட அட்டகாசமான ஸ்பெல்களை அவர் வீசினார்.

அதுவும் ஐந்தாம் நாள் வந்தவுடனேயே பிரசித் கிருஷ்ணா இரண்டு பவுண்டரிகளைக் கொடுத்ததும் ஜேமி ஸ்மித் ஆட்டத்தை முடித்து விடுவார் என்றே தோன்றியது. ஆனால், பிரசித் கிருஷ்ணாவும் மீண்டெழுந்தார்.

இந்நிலையில், சிராஜ் நேற்று ஆட்டம் முடிந்தவுடன் அளித்த பேட்டியில், “நான் பொதுவாக காலை 8 மணிக்குத்தான் எழுந்திருப்பேன். ஆனால், இன்று 6 மணிக்கெல்லாம் விழித்து விட்டேன்.

இன்றைக்கு எப்படியாவது வெற்றி பெற வேண்டும், நான் அதை முடிக்க வேண்டும் என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன்.

காலையில் கூகுள் செய்து அந்த இமேஜைப் பார்த்தேன். அதாவது ரொனால்டோ படம் அதற்கு மேலே ‘BELIEVE’ எனும் வாசகம் அந்த வால்பேப்பரை நான் டவுன்லோடு செய்தேன். ஆகவே நம்பிக்கையே முக்கியம். அதுவே என் தாரக மந்திரம்” என்றார் சிராஜ்.

Share This