அத்தியாவசிய மருந்துகளுக்கு மீண்டும் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

அத்தியாவசிய மருந்துகளுக்கு மீண்டும் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

2025 ஆம் ஆண்டில் வைத்தியசாலைகளில் அத்தியாவசிய தடுப்பூசிகள் உள்ளிட்ட மருந்துகளுக்கு மீண்டும் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான வைத்தியர் சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

மருந்துகளை இறக்குமதி செய்வதற்கான முறையான கொள்முதல் நடைமுறையை பின்பற்றாததன் காரணமாக இந்த நிலைமை ஏற்படக்கூடும் என அதன் செயலாளர் நிபுணர் வைத்தியர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், முன்னர் வைத்தியசாலைகளில் சுமார் 300 மருந்துகளுக்கு தட்டுப்பாடு காணப்பட்ட போதிலும், தற்போது அதனை குறைக்க முடிந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

Share This