பேருந்து கட்டணங்கள் அதிகரிக்கப்படும் அபாயம்
எதிர்வரும் ஜுலை மாதத்திற்குள் நிச்சயமாக பேருந்து கட்டணங்கள் காலவரையறையின்றி அதிகரிக்கப்படும் என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன இன்று (1) தெரிவித்தார்.
எரிபொருளின் விலை குறைக்கப்பட்டால் மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் எனவும், நிவாரணம் வழங்குவதற்கு எரிபொருளின் விலை மாத்திரமன்றி உதிரி பாகங்கள் மற்றும் பொருட்களின் விலையும் குறைக்கப்பட வேண்டுமென விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
சாதாரண பேருந்து ஒன்றின் விலை 100,000,000 வரை அதிகரித்துள்ளதாகவும், அதனுடன் ஒப்பிடுகையில் ஏனைய செலவுகளும் அதிகரித்துள்ளதாகவும், ஜூலை மாதத்திற்குள் அதனைக் கணக்கிட வேண்டியிருப்பதால், பேருந்துக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.