உயரும் தேங்காய் விலை – கடந்த ஆண்டை விட 88 வீத அதிகரிப்பு

உயரும் தேங்காய் விலை – கடந்த ஆண்டை விட 88 வீத அதிகரிப்பு

2025 ஜனவரி மாதம் இறுதி வாரத்தில் இந்நாட்டில் தேங்காய் ஒன்றின் சில்லறை விலை கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 88 வீதத்தால் அதிகரித்துள்ளதாக ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தற்போது சந்தையில் பெரிய தேங்காய் ஒன்று 200 – 250 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படும் நிலையில் சிறிய தேங்காய் ஒன்று 170 – 190 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுவதாக விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

2024 ஜனவரி மாதம் இறுதி வாரத்துடன் ஒப்பிடுகையில் பெரிய தேங்காய் ஒன்றின் சில்லறை விலை 78 வீதத்தாலும் சிறிய தேங்காய் ஒன்றின் சில்லறை விலை 88 வீதத்தால் அதிகரித்துள்ளதை ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

Share This