லக்னோ அணியின் தலைவராகின்றார் ரிஷப் பண்ட்
இந்த ஆண்டு இடம்பெறவுள்ள இந்தியன் பிரீமியர் லீக் (IPL) கிரிக்கெட் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணியின் புதிய தலைவராக ரிஷப் பண்ட் நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐபிஎல் தொடரை முன்னிட்டு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சவூதியில் இடம்பெற்ற மெகா ஏலத்தின் போது ரிஷப் பண்ட் லக்னோ அணியால் 27 கோடி இந்திய ரூபாய்க்கு வாங்கப்பட்டார்.
இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிக தொலைக்கு ஏலம் போன வீரர் என்ற சாதனையை ரிஷப் பண்ட் படைத்தார்.
லக்னோ அணியின் முன்னாள் வீரர் கேஎல் ராகுல் தலைமையில் முதல் இரண்டு பருவங்களின் போது அந்த அணி ப்ளேஓப் சுற்றுக்கு தகுதிப் பெற்றிருந்தது. எனினும், அந்த அணி கடந்த ஆண்டு மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
இதனால் புள்ளிப் பட்டியலில் ஏழாம் இடத்தை பிடித்திருந்தது. இதனையடுத்து ராகுல் அணியில் இருந்து விலகுவதற்கு முடிவெடுத்திருந்தார். ராகுல் அணியில் இருந்து விலகியதை அடுத்து ரிஷப் பண்டை வாங்க லக்னோ அணி முடிவெடுத்திருந்தது.
இதனால் ஏலத்தில் கடும் போட்டிக்கு மத்தியில் ரிஷப் பண்டை லக்னோ அணி வாங்கியது.
ஐபிஎல் 2025 மெகா ஏலத்திற்கு முன்னதாக நிக்கோலஸ் பூரன், ரவி பிஷ்னோய், மாயங்க் யாதவ், ஆயுஷ் படோனி மற்றும் மொஹ்சின் கான் ஆகிய ஐந்து வீரர்களைத் லக்னோ அண தக்க வைத்துக் கொண்டது.
கடந்த காலங்களில் டெல்லி அணியின் தலைவராக ரிஷப் பண்ட் செயற்பட்டிருந்தார். எனினும், மெகா ஏலத்திற்கு முன்னதாக அவர் டெல்லி அணியில் இருந்து விலகினார்.
உரிமையாளர்களுக்கும் நிர்வாகத்திற்கும் கேப்டன் பதவியைத் தேர்ந்தெடுக்க யாரும் முன்வரவில்லை. 2016ஆம் ஆண்டு ஐபிஎல்லில் அறிமுகமான பண்ட், ஒரே ஒரு அணிக்காக மட்டுமே விளையாடினார்.
கடந்த சில ஆண்டுகளாக அவர் டெல்லி அணியை (2021-2024) வழிநடத்தினார், ஆனால் அவரால் அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் செல்ல முடியவில்லை.
இதனிடையே, இங்கிலாந்து தொடருக்கான (பெப்ரவரி 6, 9 மற்றும் 12 ஆகிய திகதிகளில் மூன்று போட்டிகள்) மற்றும் ஐசிசி சம்பியன்ஸ் கிண்ணம் 2025 (பெப்ரவரி 19 முதல் பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் திட்டமிடப்பட்டுள்ளது) ஆகிய தொடருக்கான இந்திய ஒருநாள் அணியில் பந்த் மீண்டும் இடம் பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.