விற்பனையாளரின் 3 இலட்சம் ரூபாய் பெறுமதியான அரிசி அரசுடமையாக்கம்

விற்பனையாளரின் 3 இலட்சம் ரூபாய் பெறுமதியான அரிசி அரசுடமையாக்கம்

விற்பனைக்காக அரிசி கையிருப்பில் இருந்த போதிலும், அரிசி இல்லை எனக் கூறிய விற்பனை நிலைய உரிமையாளர் ஒருவருக்கு எதிராக  நுகர்வோர் விவகார அதிகார சபை சட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

நுகர்வோர் அதிகார சபையின் குருநாகல் மாவட்ட அதிகாரிகள் கடந்த 18ஆம் திகதி இப்பாகமுவ பிரதேசத்தில் மேற்கொண்ட சோதனையின் போது குறித்த விற்பனையாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி, குறித்த விற்பனையாளருக்கு  எதிராக நேற்று (21) குருநாகல் நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இதன்போது, அந்த வியாபாரி தனது தவறை ஒப்புக்கொண்ட பின்னர், சந்தை மதிப்பில் 3 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான மதிப்புள்ள கீரி சம்பா அரிசியின் 237 பொதிகளை அரசுடைமையாக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதற்கு மேலதிகமாக, 10,000 ரூபா அபராதமும் விதிக்க நீதிமன்றம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

Share This