அரிசி தொடர்பான சோதனை நடவடிக்கைகள் தீவிரம்

அரிசி தொடர்பான சோதனை நடவடிக்கைகள் தீவிரம்

நுகர்வோர் விவகார அதிகாரசபை இதுவரை அரிசி தொடர்பாக 2,000 இற்கும் மேற்பட்ட சோதனைகளை மேற்கொண்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.

அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்பவர்களைக் கண்டறிவதற்கு வார இறுதி நாட்களிலும் இரவு நேரங்களிலும் தற்போது சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சபையின் தலைவர் ஹேமந்த சமரக்கோன் கூறியுள்ளார்.

நுகர்வோர் விவகார அதிகாரசபை அதிகாரிகள் இன்றைய தினமும் கொழும்பின் புறக்கோட்டைப் பகுதியில் பல சோதனைகளை
மேற்கொண்டனர்.

மேலும் அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்யும் வர்த்தகர்களை சட்டத்திற்கு முன் நிறுத்துவதற்காக விசேட நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிர்ணள விலையை மீறுதல் மற்றும் விலையை காட்சிப்படுத்தாமைக்காக வழக்குகளைத் தாக்கல் செய்வதற்கும் அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது.

அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்தமை தொடர்பில் ஒருவர் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டால்

ஒரு தனிப்பட்ட வணிகத்திற்கு 100,000 ரூபா முதல் 500,000 ரூபா வரையிலும் அபராதம் விதிக்கப்படலாம் என நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

 

CATEGORIES
TAGS
Share This