எதிர்வரும் தினங்களில் அரிசி விலை குறையும்
எதிர்வரும் நாட்களில் நுகர்வோருக்கு குறைந்த விலையில் அரிசியை வழங்க முடியும் என சிறு மற்றும் நடுத்தர அளவிலான நெல் ஆலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அனுராதபுரத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்று உரையாற்றிய அதன் தலைவர் யு.கே.சேமசிங்க இதனைத் தெரிவித்தார்.
இதேவேளை, இந்த ஆண்டு பெரும்போக பருவத்திற்கான நெல் அறுவடை ஆரம்பித்துள்ள நிலையில், அரசாங்கம் நெல்லுக்கான உத்தரவாத விலையை இன்னும் அறிவிக்காததால், தாம் பல பிரச்சினைகளை எதிர்கொள்வதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
பெரும்போக பருவத்தில் ஒரு கிலோ நெல்லுக்கு குறைந்தபட்சம் 140 ரூபாய் உத்தரவாத விலை அறிவிக்கப்பட வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.
அம்பாறை மாவட்டத்தின் ஹுலன்னுகே, லாஹுகல மற்றும் சென்கமுவ பகுதிகளில் நெல் அறுவடை பணிகள் ஆரம்பித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.