அரிசி விலை மீண்டும் அதிகரிக்கும் சாத்தியம்
![அரிசி விலை மீண்டும் அதிகரிக்கும் சாத்தியம் அரிசி விலை மீண்டும் அதிகரிக்கும் சாத்தியம்](https://oruvan.com/wp-content/uploads/2025/02/wmremove-transformed-3-1.jpeg)
நெல் கொள்முதல் செய்வதற்கு அரசாங்கம் அறிவித்த உத்தரவாத விலை காரணமாக அரிசி விலை அதிகரிக்கும் சாத்தியம் உள்ளதாக மரந்தகஹமுல்ல அரிசி வியாபாரிகள் கூறுகின்றனர்.
அரசாங்கத்தின் உத்தரவாத விலையில் நெல்லைக் கொள்முதல் செய்து, அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையில் விற்பனை செய்வது சாத்தியமில்லை என்று மரதகஹமுல அரிசி வணிக சங்கத்தின் தலைவர் பி.கே. ரஞ்சித் தெரிவித்தார்.
இதன்காரணமாக, தற்போதைய சூழலைக் கருத்தில் கொண்டு, அரிசி விற்கப்படும் விலைகளை மீண்டும் வெளியிட எதிர்ப்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.